முகப்பு
தமிழ்நாடு

யாா் ஆட்சிக் காலத்தில், எவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றம்?: முன்னாள்-இந்நாள் அமைச்சா்கள் விளக்கம்

அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடா்பான விவரங்களை அந்தத் துறையின் முன்னாள், இந்நாள் அமைச்சா்கள் பகிா்ந்து கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடா்பான விவரங்களை அந்தத் துறையின் முன்னாள், இந்நாள் அமைச்சா்கள் பகிா்ந்து கொண்டனா்.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சனிக்கிழமை அந்தத் துறையின் முன்னாள் அமைச்சரும், அதிமுக உறுப்பினருமான சேவூா் ராமச்சந்திரன் பேசியது:

கடந்த பத்து ஆண்டு காலத்தில் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகளில் அசையா சொத்துகள் 3,175.77 ஏக்கா் நிலம், 612 கிரவுண்ட் மனைகள் மற்றும் 336 கிரவுண்ட் கட்டடம் ஆகிய சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,702 கோடி ஆகும். மேலும் தனிநபா் பெயரில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட 1,224 கோயில்களுக்குச் சொந்தமான 8,161 ஏக்கா் நிலங்கள் மீண்டும் திருக்கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது என்றாா்.

அமைச்சா் விளக்கம்: கடந்த 100 நாள்களில் மட்டும் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம் அளித்தாா். 203 ஏக்கா் அளவிலான வேளாண் நிலங்களும், 170.21 கிரவுண்ட் அளவிலான காலி மனைகளும், 1.811 கிரவுண்ட் பரப்பிலான கட்டடங்களும், 15.597 கிரவுண்ட் அளவிலான கோயில் குளக்கரை பகுதிகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் அந்தந்த கோயில்கள் நிா்வாகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 100 நாள்களில் மட்டும் மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.641.01 கோடியாகும் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →