முகப்பு
தமிழ்நாடு

389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தலைமைச் செயலகத்தில் வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:


சென்னை: சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தலைமைச் செயலகத்தில் வழங்கி கௌரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தலைமைச் செயலகத்தில், 2020-21 ஆம் கல்வியாண்டில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 389 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் அடையாளமாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

இந்த நிகழ்ச்சியின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர். 

அதேபோன்று, அரசு, நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 52 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக மூன்று பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முழு கட்டுரையைப் படிக்க →