தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார் மாரியப்பன் தங்கவேலு

முதல்வர் மு.க.ஸ்டாலினை டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலினை டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது நீரிவளத்துறை அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாரியப்பன், முதல்வரை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 

அவர், எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அரசு வேலை வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அரசு பணி வழங்குவதாக முதல்வரும் உறுதி அளித்தார். டோக்கியோவில் மழை பெய்ததால் தங்கம் வெல்ல முடியாமல் போனது. இது சிறிது வருத்தம் அளிக்கிறது. 

அடுத்த பாராலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT