தமிழ்நாடு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் மாரியப்பன் தங்கவேலு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை டோக்கியோ பாராலிம்பிக் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.  

DIN

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை டோக்கியோ பாராலிம்பிக் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 26 வயதான மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016-இல் ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றாா். இந்த முறை டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் அவா் 1.86 மீட்டா் உயரத்தை தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். இதன் பிறகு நாடு திரும்பிய அவருக்கு தில்லியில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், மாரியப்பன் தங்கவேலுவையும், அவரது பயிற்சியாளா் ராஜவையும் பாராட்டினாா். இதையடுத்து விமானம் மூலம் தில்லியில் இருந்து அவர் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில், தமிழக பாராலிம்பிக் சங்கம் சார்பில் மாரியப்பனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தான் வென்ற வெள்ளிப்பதக்கத்தை காண்பித்து மாரியப்பன் தங்கவேலு வாழ்த்துப்பெற்றார். முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சென்று சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

SCROLL FOR NEXT