தமிழக அரசு 
தமிழ்நாடு

கைத்தறி நெசவாளர்களுக்கு 10 % ஊதிய உயர்வு

கைத்தறி நெசவாளர்களுக்கான அடிப்படை ஊதியம் 10 சதவீதம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

DIN

கைத்தறி நெசவாளர்களுக்கான அடிப்படை ஊதியம் 10 சதவீதம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆர்.காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியது:

கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 10 சதவீதம் மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். கதர், பாலிஸ்திரா ரகங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்வதற்கு ரூ. 20 லட்சம் செலவில் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும்.

மேலும், திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் ரூ. 6 கோடியில் சாயக் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் ரூ. 5 கோடி மதிப்பில் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் குறித்த கைத்தறி அருங்காட்சியம் அமைக்கப்படும்.

கைத்தறி நெசவாளர்களின் நல்வாழ்விற்காக ஆரோக்கிய நெசவாளர் நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 6 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் 75 நிரந்தர பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ அறிவிப்பு

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

ஜீவாவின் புதிய படப்பெயர்!

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்

SCROLL FOR NEXT