தமிழ்நாடு

மாணவர்களுக்கு வழங்கும் புத்தகப் பைகளில் அரசியல் தலைவர்களின் படங்கள் கூடாது: உயர்நீதிமன்றம்

DIN

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகப் பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு அரசின் நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி கே பழனிசாமி ஆகியோரது படங்களைக் கொண்ட புத்தகப்பைகளை நடப்பு ஆண்டு மாணவர்களுக்கு வழங்குவதைக் கைவிடுவது தொடர்பாக 'நமது திராவிட இயக்கம்' என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 'முன்னாள் முதல்வர்கள் படங்கள் அச்சிடப்பட்ட புத்தகப் பைகள் வீணாக்கப்படாது. அவை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். மேலும் அந்த பைகளை வீணாக்க விருப்பமில்லை, மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகப் பைகளில் தலைவர்களின் படங்களை அச்சிட விருப்பமில்லை என்று முதல்வரும் தெரிவித்திருக்கிறார்' என்று நீதிபதியிடம் தெரிவித்தார். 

அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், இந்த நடைமுறை இனி தொடரக்கூடாது, அதனை அரசு உறுதி செய்ய வேண்டும். புத்தகப் பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு அரசின் நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT