தமிழ்நாடு

பள்ளிகளில் அதிகரிக்கும் கரோனா: ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை

DIN


சென்னை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு தொடர்ந்து பதிவாகிவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பொதுத் தேர்வெழுதவிருக்கும் மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பள்ளிகளைத் திறக்க  தமிழக அரசு முடிவெடுத்தது.

அதன்படி, செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதலே, பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரவக் காரணம், கரோனா பரவாமல் தடுக்க செய்ய வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

காணொலி வாயிலாக பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT