புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவைக் கூடும்போது நேரலை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:
கலைவாணர் அரங்கில் சில காரணங்களால் பேரவை கூட்டத்தை நேரலை செய்ய முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நடக்கும் போது நேரலை செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.