தமிழ்நாடு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

DIN

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் வினைகளைத் தீர்ப்பவர் வெற்றிகளைத் தருபவர், விநாயகர் எளிமையான கடவுள், எளியவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கக்கூடிய இறைவன் . இந்த விநாயகர் சதுர்த்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பை தருவதாகவும் அதே சமயம் மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் வருங்கால முன்னேற்றத்திற்கு வித்திடுவதாகவும் அமையட்டும். விநாயகர் அருளால் கரோனா எனும் சவாலான சூழ்நிலையை தடுப்பூசி கொண்டு எதிர்க்கும் மன உறுதி கொண்டு இந்த விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

பாதுகாப்பான உடல்நிலையும், சுய சார்பான நாட்டின் நிலையையும் அடைந்து நாட்டிலும்,வீட்டிலும் மகிழ்ச்சிபொங்க இந்த விநாயகர் சதுர்த்தி வழிவகுக்கட்டும். மேலும் புதுச்சேரியில்  விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுவெளியில்  கொண்டாட புதுச்சேரி அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திருக்கும் நிலையில் அண்டை மாநிலங்களில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.என்று தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT