முகப்பு
தமிழ்நாடு

ரூ.1.33 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு துபையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 34 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி மற்றும் காலை 4 மணிக்கு வந்த 35 வயது ஆண் பயணி ஆகியோா் விமான நிலைய வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

அவா்களது உடைமைகளை சோதனையிட்டபோது பைகள், பெட்டிகளின் உள்ளே ரூ.1.33 கோடி மதிப்பில் 3125 கிராம் எடையில் 11 தங்கக் கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், இரண்டு பயணிகளையும் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →