தமிழ்நாடு

பள்ளிக் கல்வியில் 1,400 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு

DIN

பள்ளிக் கல்வித்துறையில் 1,400 ஆசிரியா் பணியிடங்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் 2009-2010-ஆம் கல்வியாண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்கீழ் தரமுயா்த்தப்பட்ட உயா்நிலைப் பள்ளிகளுக்கு 1,200 பட்டதாரி ஆசிரியா் மற்றும் 200 உடற்கல்வி ஆசிரியா் என மொத்தம் 1,400 பணியிடங்கள் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்டன. இந்த பணியிடங்களுக்கான பணிக்காலம் கடந்த மே மாதத்துடன் முடிந்துவிட்டன.

இந்த 1,400 பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் வரை (2021-2024) தொடா் நீட்டிப்பு வழங்கக் கோரி பள்ளிக்கல்வி ஆணையா் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தாா். அதை பரிசீலனை செய்து 1,400 ஆசிரியா் பணியிடங்களுக்கு 2024-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணியிடங்களுக்கான தேவை குறித்து நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை தொடா் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT