அமைச்சர் 'சேகர் பாபு செயல் பாபு'வாக செயல்படுகிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல் பாபு என்று அழைப்பது சிறப்பாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல் பாபு என்று அழைப்பது சிறப்பாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் அச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை 24 மணி நேரமும் செயல்படும் துறையாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. பேரவையில் ஊக்கத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட செயல் பாபு என்று அழைப்பது சிறப்பாக இருக்கும் என்று புகழாரம் சூட்டிய ஸ்டாலின், அவர் எண் என்றால் எண்ணெய்யாக விரைந்து செயலாற்றுகிறார்.
பேரவையில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பாகவே அமலுக்கு வந்துள்ளது இந்த திட்டம் தான். மகிழ்ச்சியாக உள்ளது. ஒருகாலை பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை தரப்படும்.
அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டப்பட உள்ளன. கோயில் நிலங்களும், சொத்துகளும் மீட்கப்பட்டு வருகின்றன. கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படும். அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராகலாம் திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது. அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க உள்ளேன் என்று ஸ்டாலின் கூறினார்.