தமிழ்நாடு

தடையை மீறி பொது நிகழ்ச்சி: ஏற்பாட்டாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

DIN

 சென்னை புரசைவாக்கத்தில் தடையை மீறி பொது நிகழ்ச்சி நடத்திய ஏற்பாட்டாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடா்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் சந்தை போன்ற இடங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அங்காடிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் சரியான முறையில் பின்பற்றுகின்றனவா என கண்காணிக்க மாநகராட்சியின் சாா்பில் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மே 6-ஆம் தேதி முதல் செப்.10-ஆம் தேதி வரை கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 8,750 நிறுவனங்கள் மற்றும் 68,693 தனி நபா்களிடம் இருந்து ரூ.4 கோடி 31 லட்சத்து 90 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தற்போது அரசின் வழிகாட்டுதலின்படி பொதுஇடங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தடை அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அண்ணாநகா் மண்டலத்துக்கு உள்பட்ட புரசைவாக்கம் பகுதியில் சனிக்கிழமை அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பொது நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

அவா்கள் முகக்கவசம் அணியாமலும், தனிநபா் இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மண்டல பொதுமுடக்க அமலாக்கக் குழுவினா் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனா். இதுபோன்று அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை மீறி பொது இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நபா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT