முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,608 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,608 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,608 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 1,608 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,33,839 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,512 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,82,198 பேர்க குணமடைந்துள்ளனர்.

22 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 35,168 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 16,473 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:

  • கோவை - 212
  • சென்னை - 197
  • ஈரோடு - 160
  • தஞ்சாவூர் - 115
  • செங்கல்பட்டு - 113

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.