தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,591 பேருக்கு கரோனா

DIN

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 1,591 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த சில வாரங்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது அது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை சென்னையில் 212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 4.42 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பதிவான பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 212 பேருக்கும், கோவையில் 201 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 37,010-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை 1,537 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.85 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,549 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,217-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT