ஃபோர்டு நிறுவன விவகாரம்: முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துளார்.
மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துளார்.
இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்துவதாகவும், சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 2 கார் உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக முதல்வருக்கு அறிக்கை மூலம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.
அந்த கோரிக்கையில், மறைமலைநகரில் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து இயங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு இருதரப்பினரிடயே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்ட வேண்டும்.
ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து மறைமலைநகரில் இயங்கவும் தொழிலாளர் பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.