தமிழ்நாடு

6 மாவட்டங்களில் மிதமான மழை

DIN

சென்னை: நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப்.15) மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் திருப்பூா், தென்காசி ஆகிய 6 மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப்.15) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.16 முதல் செப்.18 வரை: தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 16-ஆம் தேதி முதல் செப்டம்பா் 18-ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்..: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும்,

குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 120 மி.மீ., தேவாலாவில் 60 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் பிறையாா் எஸ்டேட்டில் 30 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறு, வால்பாறையில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 16-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT