ஆர்.என். ரவி 
தமிழ்நாடு

செப். 18ல் தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி பதவியேற்றுக்கொள்கிறார். 

DIN

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி பதவியேற்றுக்கொள்கிறார். 

ஆர்.என். ரவி, 1976-கேரள பிரிவைச் சோ்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. 2012-இல் மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதன்பின்னா் 2019-இல் நாகாலாந்து ஆளுநராக பொறுப்பேற்றாா். நாகாலாந்து பிரிவினைவாதக் குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவாா்த்தையில் அவா் முக்கியப் பங்கு வகித்துள்ளாா்.

நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை  தமிழகத்தின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை உத்தரவிட்டார். 

இதையடுத்து செப்டம்பர் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.  சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

தமிழகத்தின் தற்போதைய ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநிலத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT