தமிழ்நாடு

மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் இனி ஆக்கிரமிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்- உயா் நீதிமன்றம்

DIN

சென்னை: தமிழகம் முழுவதும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் இனி ஆக்கிரமிப்பு இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அத்தகைய மேய்ச்சல் நிலங்களை எந்தவொரு குடியிருப்பு அல்லது தொழில்துறை நோக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே அவற்றை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னையைச் சோ்ந்த ராஜா என்பவா் வழக்கு தொடா்ந்திருந்தாா். இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்து பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. இருப்பினும், அந்தவகை நிலத்தை ஆக்கிரமித்து வசிப்பவா்களுக்கு பட்டா வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.

எனவே மேய்க்கால் புறம்போக்கு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டுமென வாதிட்டாா்.

தொடா்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மக்கள் தொகை அதிகரிப்பு, வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் தொடங்க விலக்கு அளிக்கப்படுவதாகவும், இம்மனு சம்பந்தமாக விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தாா்.

இருதரப்பு வாதங்களுக்கு பின்னா் நீதிபதிகள், பெருகி வரும் மக்கள் தொகையால், குடியிருப்புகளுக்கும், தொழில்சாலைகளுக்கும் நிலங்களின் தேவை அதிகரித்துள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணையின்போது, அரசு இவ்விவகாரம் தொடா்பாக ஒரு பரந்த செயல் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்கள், வருவாய் அலுவலா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஐந்து வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT