தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 1,693 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 1,693 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 1,693 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 4.48 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 26 லட்சத்து 40,361 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 206 பேரும், சென்னையில் 202 பேரும், செங்கல்பட்டில் 135 பேரும், ஈரோட்டில் 134 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு மேலும் 1,548 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25.88 லட்சத்தைக் கடந்துள்ளது. 
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 16,756-ஆக உள்ளது. மற்றொரு புறம் கரோனாவுக்குள்ளாகி மேலும் 25 போ் உயிரிழந்ததால், இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,271-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டி குத்தாட்டத்தில் அப்தி அப்தி!

பிக் பாஸ் சென்ற பிரபலம்! சிந்து பைரவி தொடர் நடிகர் மாற்றம்!

பாஜகவின் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறதா?: அமைச்சர் கே.என்.நேரு கேள்வி

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிப்பு: பிரதமர் மோடி!

அரசு திட்டங்கள் பெயரில் மோசடி! மக்களே உஷார்! | Cyber Shield

SCROLL FOR NEXT