கோப்புப் படம் 
தமிழ்நாடு

கடந்த ஆட்சியில் அகற்றப்பட்ட கல்வெட்டுகள் மீண்டும் நிறுவப்படும்

 முந்தைய திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட கட்டடங்களில் இருந்து நீக்கப்பட்ட கல்வெட்டுகளை அரசு உத்தரவின்படி மீண்டும் நிறுவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொதுப் பணித் துறை விளக்கமளித்துள்ளது

DIN

 முந்தைய திமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட கட்டடங்களில் இருந்து நீக்கப்பட்ட கல்வெட்டுகளை அரசு உத்தரவின்படி மீண்டும் நிறுவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொதுப் பணித் துறை விளக்கமளித்துள்ளது.

தலைமைச் செயலகமாக இருந்து மாற்றியமைக்கப்பட்ட ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் பழைய கல்வெட்டு மீண்டும் நிறுவப்பட்டது குறித்து இத்தகைய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

முன்னாள் முதல்வா் கருணாநிதி தலைமையிலான முந்தைய (2006-2011) திமுக ஆட்சியில் ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா மேம்பாலம் அருகில் செம்மொழி பூங்கா, தொல்காப்பியா் பூங்கா, மெரீனா கடற்கரையில் பூங்காக்கள், விழுப்புரம், திருவாரூா், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூா், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள், ஒரத்தநாடு, பெரம்பலூா், சுரண்டை, லால்குடி உட்பட 14 இடங்களில் அரசு கலை கல்லூரிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் உட்பட 12 இடங்களில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அக்கட்டடங்கள் சில விரிவுபடுத்தப்பட்டன. அதேபோன்று தலைமைச் செயலகம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. மேலும் சில திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வேறு பெயரில் செயல்படுத்தப்பட்டன.

இதன் காரணமாக திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட பழைய கல்வெட்டுகள் அகற்றப்பட்டு புதிய கல்வெட்டுகள் வைக்கப்பட்டன. குறிப்பாக, திருச்சி ஆட்சியா் அலுவலகம், செம்மொழி பூங்கா, மெரீனா கடற்கரை, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை ஆகிய இடங்களில் இருந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், அவற்றை மீண்டும் நிறுவ வேண்டும் என்று தலைமைச் செயலா் வெ. இறையன்பு அனைத்துத் துறை செயலா்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டாா்.

அதன்படி, சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திலிருந்து அகற்றப்பட்ட கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிற இடங்களிலும் கல்வெட்டுகள் வைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

SCROLL FOR NEXT