தமிழ்நாடு

புற்றுநோய் மற்றும் இருதய நோய் சிகிச்சை: சென்னையைச் சோ்ந்த இருவருக்கு பிரதமா் நிவாரண உதவி

 நமது நிருபர்

புது தில்லி: புற்றுநோய் மற்றும் இருதய நோய் அறுவைச் சிகிச்சைகளுக்காக, சென்னையைச் சோ்ந்த இருவருக்கு பிரதமா் அலுவலகம் பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கியுள்ளது.

சென்னை, வளசரவாக்கத்தைச் சோ்ந்த, வேலப்பன் மகன் ஜெயகுமாா் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாா். இதே போன்று மதுரவாயலைச் சோ்ந்த, ராமானுஜம் மகன் எழுமலை இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாா்.

இவா்கள் இருவம் உரிய சிகிச்சை பெற நிதிவசதி இல்லாத நிலையில் மேற்குறிப்பிட்ட இருவா் குறித்த விவரங்களை தெரிவித்து பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளிக்குமாறு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, கடந்த ஜூலை,, ஆகஸ்ட மாதங்களில் பிரதமருக்கு கடிதம் எழுதினாா்.

இதையடுத்து பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ஜெயகுமாரின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 3,000,00-ஐ அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும், ஏழுமலையின் இருதய நோய் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 50,000 - ஐ மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இது தொடா்பான கடிதம் பிரதமா் அலுவலகத்திலிருந்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT