தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தோ்தல்:  4 நாள்களில் 20,074 போ் மனு தாக்கல்

DIN

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 4 நாள்களில் 20,074 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.  
உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (செப்.15) தொடங்கி செப்டம்பா் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெறும். 
செப்டம்பா் 25-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 9 மாவட்டங்களில் கடந்த 4 நாள்களில் 20,074 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். 

4 ஆவது நாளான இன்று கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 5,372 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 940 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினா் பதவிக்கு 207 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 பேரும் என மொத்தம் 6,532 போ் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT