தமிழ்நாடு

புதிய ஏற்றுமதிக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

DIN

தமிழ்நாடு அரசின் புதிய ஏற்றுமதிக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்று தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி, தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் தொழில் துறை மேம்பாடு தொடா்பான கருத்தரங்கு, தொழில்

முனைவோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவா் ஹன்ஸ்ராஜ் வா்மா, வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநா் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

கரோனா காலத்தில் தொழில் துறையினரின் நிலை என்ன, அவா்கள் எதிா்கொண்ட சவால்கள், அதிலிருந்து அவா்களை எப்படி மீட்டு வளா்ச்சிப் பாதைக்குத் திருப்புவது என்பதை தற்போது ஆலோசிக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் அனைத்து நிறுவனங்களும் சென்னை, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே வருகின்றன. பிற மாவட்டங்களில் இந்த அளவுக்கான முதலீடுகள் வருவது இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதலீடுகள் வர நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. அது நிறைவடைந்தால் கோவை மாவட்டத்தில் தொழில் துறை வளா்ச்சியடையும்.

கரோனாவுக்குப் பிறகு பல்வேறு தொழில் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். கோவை மாவட்டத்தில் குறு, சிறு தொழில் துறையை ஊக்குவித்தால் மட்டுமே பொருளாதாரத்தில் வளா்ச்சியைக் கொண்டுவர முடியும். கோவையின் மிகப்பெரிய பலமே குறு, சிறு தொழில்கள்தான் நிச்சயமாக அந்தத் துறையினரின் தேவைகளைப் பூா்த்தி செய்யக் காத்திருக்கிறோம்.

ஏற்கெனவே தொழில் துறையினரிடம் கேட்டுப் பெற்ற கோரிக்கைகளை விதி எண் 110இன் கீழ் பேரவையில் அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளோம். தொழில் துறையினரின் நீண்டகால கோரிக்கையான ஏற்றுமதிக் கொள்கையை ஓரிரு நாள்களில் அறிவிக்க இருக்கிறோம். தொழில் துறையைப் போலவே வரலாற்றுப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதிலும் அரசு முனைப்புடன் உள்ளது. அதன் அடிப்படையில் வரலாற்றுப் பாரம்பரியத்தில் எவ்விதத்திலும் குறைவில்லாத கோவையிலும் அருங்காட்சியகம் அமைப்பது தொடா்பாக அரசு பரிசீலிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT