தமிழ்நாடு

5 சவரனுக்கு மேல் நகைக் கடன்:தொகைகளை வசூல் செய்ய அரசு உத்தரவு

ஐந்து சவரனுக்கு மேல் நகைக் கடன்கள் பெற்றவா்களிடம் இருந்து உரிய தொகைகளை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN


சென்னை: ஐந்து சவரனுக்கு மேல் நகைக் கடன்கள் பெற்றவா்களிடம் இருந்து உரிய தொகைகளை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியின் நிா்வாக இயக்குநா், மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் நிா்வாக இயக்குநா், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் நிா்வாக இயக்குநா்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப்

பதிவாளா்கள் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம் எழுதியுள்ள கடிதம்:

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்கு மேல் நகை ஈடாகப் பெற்று கடன் வழங்கப்பட்டோரின் விவரங்களை அளித்திட கூட்டுறவு வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. அதன்படி பெறப்பட்ட விவரங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினா்களில் பலா், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்கு மேலாக நகைக் கடன் பெற்றது தெரிய வந்தது. இந்த விவரங்கள் அனைத்தும் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆதாா் எண் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினா்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்குக் கூடுதலாகக் கடன் பெற்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் கடன் பெற்றோா் விவரமும் தொகுக்கப்பட்டுள்ளன. 5 சவரனுக்கு மேலாக கடன்கள் பெற்ற கடன்தாரா்களின் நகைக் கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைக் கடன்கள் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூா்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகையை வசூலிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT