தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: ஒரே இரவில் 450 ரெளடிகள் கைது

DIN

தமிழகம் முழுவதும் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 450 ரெளடிகளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நேற்று இரவு திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் நேற்று இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு ஓரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 450 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 181 நபர்கள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியானையின் படி கைதானார்கள்;. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 420 நபர்களிடமிருந்து நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டுள்ளது. கொலை குற்றங்களில் ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT