தமிழ்நாடு

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு

DIN


கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டியில் இனாம்மணியாச்சி விலக்கு அருகே தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில், தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலருமான கடம்பூர் ராஜு எம்.எல். ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலர் சீனிராஜ், ஒன்றியச் செயலர்கள் வினோபாஜி, அய்யாத்துரை பாண்டியன், வடக்கு மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் சிவபெருமாள், ஜெயலலிதா பேரவை பொருளாளர் வேலுமணி, செயலர் செல்வகுமார், கட்சியின் நகர செயலர் விஜய பாண்டியன் உள்பட அதிமுகவினர் திரளானோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். 

பின்னர், அங்கு அமைக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு எடப்பாடி கே. பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலர் சீனிராஜ் ஏற்பாட்டில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமுமுக வழக்குரைஞர் அணியை சேர்ந்த சங்கர் கணேஷ். கிழக்கு ஒன்றிய இணைச் செயலர் கோமதிநாயகம் உள்பட 150க்கும் மேற்பட்ட பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT