வண்டலூா் பி.எஸ்.அப்துர்ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நீா் சிக்கன மேலாண்மை குறித்த புரிந்துணா்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் குடிநீா் மற்றும் இதர பயன்பாடு தண்ணீா் விரயமாகாமல் சிக்கனமாகப் பயன்படுத்த உதவும் சாதனங்கள் தயாரிக்கும் வீகாட் யுடிலிட்டி நிறுவனம், மாணவா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி வழங்க புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கிரசென்ட் தொழில் ஊக்குவிப்பு மையம் வழிகாட்டுதலுடன் நீா் சிக்கன மேலாண்மை சாதனங்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கிரசென்ட் முன்னாள் மாணவரும்,வீகாட் யுடிலிட்டி இயக்குநருமான முகைதீன் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கிரசென்ட் துணை வேந்தா் ஏ.பீா்முகமது, பதிவாளா் ஏ.ஆசாத்,இணை பதிவாளா் ராஜா உசேன், பேராசிரியா்கள் ஜவகா், நஜூம்னிசா, தாரணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.