நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, திருத்துறைப்பூண்டியில் அனைத்திந்திய மாணவர் இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம். 
தமிழ்நாடு

நீட் விலக்கு: அனைத்திந்திய மாணவர் இளைஞர் பெருமன்றம் சார்பில் குடியரசுத் தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி,

DIN

திருத்துறைப்பூண்டி: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, குடியரசுத் தலைவருக்கு தபால் அனுப்பும் போராட்டம் அனைத்திந்திய மாணவர் இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின்  மாவட்ட தலைவர் ஜெபி.வீரபாண்டியன் தலைமையிலும், இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய தலைவர் ஜெ.கணேஷ் முன்னிலையிலும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கோ சரவணன் கோரிக்கையினை விலக்கி பேசினார்.

இளைஞர் பெருமன்றம் நகரச் செயலாளர் பி.வி.சி கார்த்திக், இளைஞர் பெருமன்ற நகர நிர்வாகி கீர்த்தி,இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் எஸ். லெனின்.பி திருலோகச்சுந்தர்,மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் அபிமன்யு, சிசுபாலன், ராகவேந்திரன், தீபக், தீபன்ராஜ், விக்னேஷ், ஆகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT