தமிழ்நாடு

தினசரி கரோனா பாதிப்பு குறைந்தது

DIN

தமிழகத்தில் 3 நாள்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 1,700-க்கு கீழ் குறைந்துள்ளது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை 1,694 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சாலை வழியே கா்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவலின்படி அதிகபட்சமாக கோவையில் 196 பேருக்கும், சென்னையில் 190 பேருக்கும், ஈரோடு, செங்கல்பட்டில் தலா 118 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26,57,266 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், கரோனா தொற்றுக்குள்ளாகி 17,285 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து மேலும் 1,658 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.04 லட்சத்தைக் கடந்துள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,490-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT