தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம்: உச்சநீதிமன்றம்

DIN

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு 4 மாத காலவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

நகர்ப்புற தேர்தல் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்பு நடைபெற்ற விசாரணையில் 7 மாதம் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரியிருந்தது.

இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் பேசியது:

தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் கூறும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது. அடுத்த 4 மாதத்திற்குள் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT