காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து அக்ராவரம் கே. பாஸ்கர் திடீர் ராஜிநாமா
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அக்ராவரம் கே. பாஸ்கர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அக்ராவரம் கே. பாஸ்கர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பாஸ்கர், இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியில் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு அனுப்பி உள்ளார்.