ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை 
தமிழ்நாடு

ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


சென்னை: ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் கணவர் பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுளள்து.

வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன?
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 1991 - 96ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அப்போது, அவரது கணவர் பாபு நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளைக்கு ரூ.15.45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையில் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று கூறி, ஊழல் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில்,  முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கிருபாகரன் இறந்துவிட்ட நிலையில், வெங்கடகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார். 

குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருப்போருக்கான தண்டனை விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டது. அதில், இந்திரகுமாரி மற்றும் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT