ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடுஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர் வளையம் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க- ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்லலாம்: சசிகலா
அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். தொடர்ந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இதேபோல் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலாவும், அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரனும் அஞ்சலி செலுத்தினர்.
6 முறை தமிழக முதல்வராக பொறுப்புவகித்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.