முகப்பு
தமிழ்நாடு

சிபிஎஸ்இ அறிவிப்புக்குப் பிறகு தமிழகத்தில் +2 தேர்வு குறித்து முடிவு: அமைச்சர் தகவல்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 

Updated On : 1 ஜூன் 2021, 12:50 pm IST
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பகிர்:

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புக்குப் பிறகு தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

ஆலோசனைக்குப் பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 

Advertisement

Advertisement

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும். 

அதாவது சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசின் தேர்வு நடத்தும் தேதிகள் வந்த பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments