முகப்பு
தமிழ்நாடு

பிளஸ் 1 துணைத்தோ்வு மறுகூட்டல்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 1 துணைத்தோ்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
கோப்புப் படம்
பகிர்:

பிளஸ் 1 துணைத்தோ்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 1 துணைத்தோ்வு கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்திற்கு நவ.11, 12 ஆகிய இரு நாள்களில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ளுமாறு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் தோ்வா்களின் வேண்டுகோளை ஏற்று விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நவ.15 (திங்கள்கிழமை) அன்று ஒருநாள் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.