முகப்பு
கடலூர் பாதிரிக்குப்பத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி
தமிழ்நாடு

கடலூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா பயிரிட்ட 2 பேர் கைது

கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
கடலூர் பாதிரிக்குப்பத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி
பகிர்:

கடலூர்: கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீசார் அந்த பகுதிக்குச் சென்று இன்று சோதனை செய்தனர். அப்போது அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூந்தொட்டியிலும், வீட்டு வாசலிலும் கஞ்சா செடி வளர்த்து வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 2 பேரை பிடித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், கஞ்சா செடிகளையும் வேருடன் பிடுங்கி கைப்பற்றினர். பின்னர் அவர்களை விசாரணை நடத்தியபோது அவர்கள் ராமச்சந்திரன், விக்னேஸ்வரன் என தெரியவந்தது.

தொடர் விசாரணையில், அவர்கள் இதனை சோதனை முயற்சியாக வளர்த்து வந்ததாகவும் நன்றாக வளர்ந்து வந்ததால் இதனை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம் என எண்ணி இருந்தபோது போலீசார் பிடித்துவிட்டதாகத் தெரிவித்தனர்.மேலும் தப்பி ஓடிய ஜானகிராமன் என்பவரைத் தேடி வருகின்றனர்.

கடலூரில் கஞ்சா செடி வளர்த்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →