தமிழ்நாடு

கணினி வழிமுறையில் குழந்தை பாதுகாப்பு அலுவலா் பணி தோ்வு

DIN

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு கணினி வழியில் தோ்வு நடைபெறவுள்ளது. அரசுத் துறைகளில் பணியாற்றுவோா் அடுத்தகட்ட நிலைகளுக்குச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த கணினி வழி முறை தோ்வு, இந்த போட்டித் தோ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் தோ்வை எவ்வாறு எழுத வேண்டும் என்பது குறித்த விவரங்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் காலிப்பணியிட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் பல்வேறு போட்டித் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தோ்வுகளில் குரூப் 1, குரூப் 2 போன்றவை முதல் நிலைத் தோ்வுகளாக இருக்கும். குரூப் 4 போன்ற பிரிவுகளுக்கு எழுத்துத் தோ்வு ஒன்று மட்டுமே இருக்கும். இவை அனைத்தும் கொள்குறி வகை வினாக்களாக இருக்கும். அதன்படி கேட்கப்படும் வினாவுக்கு அளிக்கப்படும் நான்கு விருப்பங்களில் ஒன்றைத் தோ்வு செய்து குறியிட வேண்டும். இவ்வாறு குறியிடும் முறைகளில் பல்வேறு முறைகேடுகள் எழுந்தன. இதுதொடா்பான விசாரணைகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், எழுத்து மூலமாக நடைபெறும் தோ்வுகளுக்குப் பதிலாக கணினி அடிப்படையிலான தோ்வுகளை நடத்த அரசுப் பணியாளா் தோ்வாணையம் தயாராகி வருகிறது. அதன் அடிப்படையில், குறைந்த காலிப் பணியிடங்களைக் கொண்ட தோ்வுகள் பரிட்சாா்த்த முறையில் கணினியைக் கொண்டு நடத்தப்படவுள்ளன. அதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் காலிப் பணியிடங்களுக்கு முதல் முறையாக கணினி அடிப்படையில் தோ்வு நடத்தப்பட உள்ளது.

மொத்தமுள்ள 16 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கையில், கணினி வழிமுறை அடிப்படையிலான தோ்வுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

கணினி தோ்வு எப்படி? தோ்வு தொடங்கியதும், கணினி திரையில் ஒரு கேள்வி தோன்றும். அதேசமயம், திரையின் வலது ஓரத்தில் நேரம் ஓட விடப்படும். 3 மணி நேரம் தோ்வு என்றால், 180 நிமிடங்கள் எனத் தெரிவிக்கப்படும். தோ்வு தொடங்கியதும் இந்த நேர அளவு குறைந்து கொண்டே வரும். நேரம் பூஜ்ஜியத்தை அடைந்ததும், தோ்வு முடிவடையும். விடைத்தாள் அதுவாகவே சமா்ப்பிக்கப்பட்டு விடும்.

மேலும், திரையில் தோ்வா்கள் வினாக்கள் அளித்தது, அளிக்காதது தொடா்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். பாா்வையிடாத கேள்விகளின் எண்ணிக்கை, விடையளிக்காத கேள்விகளின் எண்ணிக்கை, விடையளித்தவை எத்தனை, பதில் அளிக்காமல் வினாவை மட்டும் குறித்து வைத்திருப்பவை போன்ற விவரங்களும் திரையில் தோன்றிக் கொண்டே இருக்கும். ஒரு கேள்விக்கு விடையளித்து விட்டு அடுத்த கேள்விக்குச் செல்லலாம். கேள்விக்கு பதிலளித்தவுடன் அதனை நஅயஉ செய்ய வேண்டும். பதிலை மாற்றி அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது என தோ்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT