மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பங்குனி அமாவாசை யாகம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பங்குனி அமாவாசை யாகம் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பங்குனி அமாவாசை யாகம் கடந்த வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் உள்ள யாகசாலையில் புனித நீர் கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டது. தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் யாகத்தை நடத்தினார். அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடைபெற்ற இந்த யாகத்தில் யாகத்தில் மிளகு, திரவியப் பொருள்கள், பட்டுப் புடவைகள், பூமாலைகள், தங்கம், வெள்ளி, இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இடப்பட்டன.
யாகத்தைக் கண்டு தரிசிக்க கோயிலுக்குள் திரண்டிருந்த பக்தர்கள்.
பூர்ணாஹுதி முடிந்தது மகா தீபாராதனை நடைபெற்றுதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் மூலவர் பிரத்தியங்கிராதேவிக்கு புனித நீரால் பாத சமர்ப்பணம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாகத்தைக் கண்டு தரிசித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்திருந்தார். யாகத்தை முன்னிட்டு கோயிலில் அன்னதானம் நடைபெற்றது.