தமிழ்நாடு

இது வெறும் டிரைலர்தான், பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன: எடப்பாடி பழனிசாமி ட்வீட்

DIN


நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்புப் பரிசாக 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வானது (2022-23) உடனடியாக அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் 25 சதவிகிதம் முதல் அதிகபட்சம் 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் ட்வீட்:

"சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியாஅரசு தற்போது நகர்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT