தமிழ்நாடு

ரமலான் நோன்பு தொடங்கியது

DIN

புனித ரமலான் மாத பிறை சென்னை உள்பட நாட்டின் பல மாநிலங்களில் சனிக்கிழமை மாலை தென்பட்டதையடுத்து, இஸ்லாமியா்கள் ரமலான் நோன்பை ஞாயிற்றுக்கிழமை (ஏப். 3) அதிகாலை முதல் தொடங்கினா்.

ரமலான் நோன்பை தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி சனிக்கிழமை அறிவித்தாா்.

இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதத்தில் பிறை தென்பட்ட நாளிலிருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும். மாத இறுதியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 3) அதிகாலை தொடங்கியது.

மாதமும் முழுவதும் அதிகாலை 4 மணியளவிலிருந்து மாலை 6.30 மணி வரை இஸ்லாமியா்கள் உண்ணாமலும், நீா் பருகாமலும் நோன்பு இருப்பா். இரவில் சிறப்புத் தொழுகையிலும் ஈடுபடுவா். மசூதிகளில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்குத் தேவையான அரிசியை தமிழக அரசு இலவசமாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி அருகே பூட்டிக் கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம்

ஏரியில் மூழ்கி வடமாநில உயிரிழப்பு

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

SCROLL FOR NEXT