தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப்.12 வரை நீதிமன்றக் காவல்

DIN

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சனிக்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 29-ம் தேதி முதல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை மொத்தம் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 12 பேரையும் ஏப்.12 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனிடையே மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT