ஒரு வாரத்தில் ரூ.4,805 கோடி நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ. பெரியசாமி
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடி மதிப்புள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடி மதிப்புள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தினால், இதுவரை 12,19,106 பேர் பயனடைந்துள்ளனர்.
இது குறித்துஅமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில், தமிழநாட்டில் ஒரே வாரத்தில் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் 12 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
அதன்படி, தமிழகத்தில் 97.05 சதவீத அளவுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. சகோதரனை சுமந்தபடி பள்ளியில் பாடம் பயிலும் மணிப்பூர் சிறுமி: கண்கலங்கவைக்கும் புகைப்படம்
சட்டப் பேரவைத் தோ்தலின் போது, திமுகவின் தோ்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடகு வைத்தவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் விவசாயக் கடன், பயிா்க்கடன் வாங்கியவா்களை தவிா்த்து குடும்பத்தில் ஒருவா் உள்ளிட்ட பல்வேறு விதிகளுடன் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, இறுதிப்பட்டியலில் உள்ளவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழுடன் அவா்களது நகைகளும் திரும்ப ஒப்படைக்கும் பணி இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.