முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து, முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றதாக டி.இமான் புகார் தெரிவித்துள்ளார். இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் ஜூன் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இசையமைப்பாளர் டி.இமான் - மோனிகா தம்பதி கடந்த ஆண்டு விவகாரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.