தமிழ்நாடு

சீமைக்கருவேலம் மரங்களை அகற்ற கால அவகாசம்: உயர்நீதிமன்றம்

DIN


தமிழ்நாட்டில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றுவது தொடர்பான இறுதிக் கொள்கையை அறிவிக்க தமிழக அரசுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் சதீஷ்குமார், பாதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

தமிழக அரசு சார்பில்,  தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும், இறுதிக் கொள்கை முடிவை அறிவிக்க 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. 

தற்போது சீமை கருவேலை மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், 700 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்றும் பணி தொடங்கி விட்டதாகவும், சீமை கருவேல மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்கவும் செயல் திட்டம். தமிழ்நாட்டில் பரவியுள்ள 196 வகையான அந்நிய மரங்களில் 23 வகையை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அரசு தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்குகளின் விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT