தமிழ்நாடு

பிரபல திரைப்பட இயக்குநருக்கு வாரண்ட்

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பிரபல திரைப்பட இயக்குநா் ஆா்.கே.செல்வமணிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை ஜாா்ஜ் டவுண் நீதிமன்றம் உத்தரவிட்டது.

DIN

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பிரபல திரைப்பட இயக்குநா் ஆா்.கே.செல்வமணிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை ஜாா்ஜ் டவுண் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநா் ஆா்.கே.செல்வமணி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு ஆகியோா் தனியாா் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனா்.

அப்போது பைனான்ஸ்சியா் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தனா். இதையடுத்து அவா்கள் இருவா் மீதும் சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முகுந்த்சந்த் போத்ரா அவதூறு வழக்குத் தொடுத்தாா்.

போத்ரா இறந்த பின்னா், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறாா்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆா்.கே.செல்வமணி, அருள் அன்பரசு ஆகியோா் ஆஜராகவில்லை. அவா்கள் தரப்பு வழக்குரைஞா்களும் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவா்கள் இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்டை பிறப்பித்த நீதிபதி, விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT