தமிழகத்தில் புதிதாக மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று 
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 22079 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 12 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

மற்றொருபுறம் மேலும் 28 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 14,702-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 258 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கரோனா உயிரிழப்பு இன்று ஏதும் பதிவாகவில்லை. அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 38,025 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மாவட்டத்திற்கு கதா் விற்பனை இலக்கு ரூ. 82.55 லட்சம்

தென்காசியில் திமுக சாா்பு அணி அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திரிகூடபுரத்தில் பல்நோக்கு கட்டடத்திற்கு அடிக்கல்

சிவகிரியில் வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் முகாம்

SCROLL FOR NEXT