தமிழ்நாடு

7 பேர் விடுதலை: ‘ஆவணங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்’

DIN

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்த ஆவணங்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில், கடந்த மார்ச் 30ஆம் தேதி, 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா?  என அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த கேள்விக்கு தமிழக அரசுத் தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பதிலில், பேரறிவாளன் மட்டுமின்றி 7 பேரின் விடுதலை குறித்த ஆவணங்களும் குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, எந்த தேதியில் ஆவணங்கள் அனுப்பப்பட்டது என தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்ட தலைமை நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளதும், ஆளுநருக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT