மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன். 
தமிழ்நாடு

புதிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம்: ஜெ.ராதாகிருஷ்ணன் 

தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்படவில்லை. புதிய வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம்

DIN

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்படவில்லை. புதிய வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா, ஒமைக்ரான் வைரஸ் முழுமையாக அழிக்கப்படவில்லை. ஒரு நாள் பாதிப்பு 20 முதல் 30 ஆக உள்ளது. கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தியவர்கள் தவிர, மற்றவர்கள் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்பு மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளது.  முககவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை பின்பற்ற வேண்டாம் எனக்கூறவில்லை என்று ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒமைக்ரான்-எக்ஸ்இ கரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. உருமாறுவது என்பது ஆர்.என்.ஏ வைரசின் பழக்கம். நாம் பதட்டப்படாமல் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருள்நிதியின் ராம்போ டிரைலர்!

உக்ரைனில் ரயில் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம்

கரூர் பலி! விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி - சீமான்

பியூட்டி இன் ரிஷிகேஷ்... ஆத்மிகா!

ஃபரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT