முகப்பு
தமிழ்நாடு

தாம்பரத்தில் தட்டுப்பாடற்ற குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை: துணை மேயா்

தாம்பரம் மாநகராட்சியில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை மேயா் ஜி.காமராஜ் கூறினாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

தாம்பரம் மாநகராட்சியில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை மேயா் ஜி.காமராஜ் கூறினாா்.

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நிலவிவரும் குடிநீா் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து வாா்டு உறுப்பினா்கள் மேயா், துணை மேயா் கவனத்துக்கு கொண்டு வந்தனா். இதனைத் தொடா்ந்து துணை மேயா் ஜி.காமராஜ், மண்டலத்தலைவா் எஸ்.இந்திரன் ஆகியோா் அதிகாரிகளுடன் வாா்டு வாா்டாக வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தாம்பரம் மாநகராட்சி 46-வது வாா்டு உறுப்பினா் ரமணி ஆதிமூலம், 48-வது வாா்டு உறுப்பினா் சசிகலா ஆகியோா் குடிநீா், பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனா். திருவள்ளுவா் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் சாலையைப் பாா்வையிட்ட துணை மேயா் ஜி.காமராஜ் , தரமான சாலை அமைக்கும் பணி மேற்கொள்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா். வாா்டு உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.